
திருச்செந்தூர் அருகே நள்ளிரவில் வீட்டின் சுவர் ஏறி குதித்து திருட முயன்ற இளைஞனை பொதுமக்கள்மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருச்செந்தூர் மாவட்டம் வடக்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள பீமன் என்பவரது வீட்டுக்குள் நள்ளிரவில் யாரோ சுவர் ஏறி குதித்து திருட முயன்றது தெரியவந்தது. அப்போது வீட்டில் இருந்த முதியவர் கூச்சலிட நிலையில் அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி அந்த இளைஞனை மடக்கி பிடித்து கல் தூணில் கட்டி வைத்தனர். அக்கம் பக்கத்தினர் அந்த இளைஞனை பிடித்து தாக்கிய நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த இளைஞனிடம் விசாரணை நடத்தியதில் அவர் பாரதி நகர் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது.
Follow Us