ja

ஆவுடையார் கோவில் அருகே ஒக்கூர் கிராமத்தில் ஜாஸ்மீன் என்ற பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற அவரது உறவினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிவமங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையை சேர்ந்தவர் ராஜாமுகமது. அவருக்கு ஆவுடையார் கோவில் அருகே ஒக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ஜாஸ்மின் ரிகானா (26) வை திருமணம் செய்து ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.

j

Advertisment

இந்த நிலையில் ராஜா முகமது கடந்த வாரம் வெளிநாடு சென்றுவிட்டதால் நாட்டரசன்கோட்டையிலிருந்து தனது தாய் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளார் ஜாஸ்மின் ரிகானா. இந்த நிலையில் நாட்டரசன் கோட்டையை சேர்ந்த ராஜாமுகமதுவின் உறவினர் மீன் வியாபாரி சிராஜிதீன் ஒக்கூரில் ஜாஸ்மின் வீட்டுற்கு வந்த போது வீட்டில் ஜாஸ்மின் தவிர வேறு யாரும் இல்லை. அப்போது இருவருக்கும் வாய்தகராறு நடந்துள்ளது.

பிறகு வீட்டில் தனியாக இருந்த ஜாஸ்மினை சரமாரியாக வெட்டி விட்டு சிராசுதீனும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் . சத்தம் கேட்டு ஓடிவந்தவர்கள் காப்பாற்றி போலீசில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் குறித்து கரூர் போலீசார் ஜாஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் சிராசுதீனை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து விசாரணை செய்துவருகின்றனர்.