காதல் திருமணம் செய்த வாலிபர் அமைச்சரால் கழுத்தை அறுத்த சம்பவம் கரூர் பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கரூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கோபிநாத் இவரும் அதே பகுதியைச் சேர்ந்த கோபிகா என்ற பெண்ணும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். கோபிநாத் சேலத்தில் பேக்டிரி கம்பெனியிலும், கோபிக ஈரோட்டில் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
இருவரும் தினமும் கல்லூரிக்கும், வேலைக்கு செல்லும் போது தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்த நிலையில் இருவரும் வெவ்வெறு சமூகத்தினர் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி கோபிநாத் - கோபிகா ஆகியோர் திருச்சியில் உள்ள உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். வீட்டில் எதிர்ப்பு அதிகமாக இருப்பாதால் இவர் போலிசில் சரண்ட அடைந்து பாதுகாப்பு ஏற்படுத்தி கொள்ளலாம் என்று இதையடுத்து இவர்கள் இருவரும் பாதுகாப்பு கேட்டு கரூர் காவல் நிலையத்தில் புதுமண தம்பதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.
ஆனால், திருமணம் செய்துக்கொண்ட பெண் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உறவினர் என்பதால், கரூர் நகர காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜ் அவர்கள் இருவரையும் பிரித்து வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், கோபிகாவை விட்டு விலகிவிடும்படியும் கோபிநாத்தை அவர் மிரட்டியதாக தெரிகிறது. நீ விலகி போகலன்னா அமைச்சர் வி மாட்டார் என்று மிரட்டியினாராம். இதில் விரக்தியடைந்த கோபிநாத் நேற்றிரவு 9 மணியளவில் பிளேடால் தனது கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் அறுத்துக் கொண்டார். இதனால் அவர் லேசான காயமடைந்தார். அவரை உறவினர்கள் தடுத்து கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஒரு காதல் பிரச்சனையில் அமைச்சர் பெயரில் பஞ்சாயத்து நடந்து மாப்பிள்ளை கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயன்ற சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் தரப்பினரோ எங்களுக்கும் இதுக்கு சம்மந்தம் இல்லை என்கிறனர். ஆனாலும் பாதிக்கப்பட்ட கோபிநாத்தோ இன்ஸ் தான் அந்த பொண்ணு அமைச்சர் உறவினர் சொல்ற அமைச்சர் தரப்பில் இருந்து பயங்கர பிரஷர் வந்து கிட்டே இருக்கு. நீ அந்த விட்டுவிட்டு ஓடி போயிடு இல்லனா நீ உயிரோட இருக்கமாட்டே உன் மேல கேசு போட்டு உள்ளே தள்ளிடுவோம். எதுக்கு அமைச்சரரோட பொல்லாப்புன்னு என்று மிரட்டியதாக கோபிநாத் தரப்பில் சொல்கிறார்கள்.