Advertisment

''அடுத்த டைம் அந்தப் பக்கம் வந்தீங்கன்னா தலை இருக்காது...'' - விஏஓவுக்கு மிரட்டல் விடுத்த இளைஞர்

Advertisment

திண்டுக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) அலுவலகத்திற்கு வந்த இளைஞர் ஆக்கிரமிப்பு அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விட்டதோடு அந்தப் பக்கம் இனிமேல் வந்தால் தலையை வெட்டி விடுவேன் என எச்சரித்து செல்லும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகிலுள்ள கோவில் குளத்தை சிலர் ஆக்கிரமித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் அந்த ஆக்கிரமிப்பானது அகற்றப்பட்டது. இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்த இளைஞர் ஒருவர் ஜன்னல் வழியாக கிராம நிர்வாக அதிகாரியைப் பார்த்து மிரட்டியதோடு எச்சரித்தார். அங்கிருந்தவர்கள் என்னப்பா ஒரு அதிகாரியை பார்த்து எப்படி பேசுற எனக் கேட்க, ''யாரு இவர் அதிகாரியா...'' என ரவுடி பாணியில் பேசிய இளைஞர் ''சார் சொல்றேன் கேளுங்க அடுத்த டைம் நீங்க அந்தப் பக்கம் வரக்கூடாது. வந்தீங்கன்னா தலை இருக்காது பாத்துக்கோங்க'' என மிரட்டி விட்டுச் சென்றார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்கள் மூலம் வைரலான நிலையில், சாணார்பட்டி காவல் நிலைய போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

police VAO village
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe