Advertisment

17 வயது சிறுமியிடம் பேசிய இளைஞர்; குடோனில் அடைத்து வைத்து கொடூரத் தாக்குதல்

nn

Advertisment

திருப்பத்தூரில் 17 வயது சிறுமியிடம் பேசியாக இளைஞர் ஒருவர் குடோனில் அடைத்து வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ராமநாயக்கன் பேட்டை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் திம்மாம்பேட்டை அடுத்த பாட்டூர் பகுதியைச் சேர்ந்த கேட்டரிங் தொழிலாளி இளைஞர் அண்ணாமலை (20) என்பவர் நண்பராக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இதை மாற்று சமூகத்தைச் சேர்ந்த சிறுமியின் பெற்றோர் அண்ணாமலை சிறுமியிடம் பேசக்கூடாது என்று எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று சிறுமியின் தந்தை சக்திவேல் மற்றும் தாய்மாமன் விஜயகுமார் ஆகியோர் கேட்டரிங் பணி உள்ளதாக கூறி செல்போன் மூலம் அழைப்பு விடுத்து ராமநாயக்கன்பேட்டை பகுதியில் உள்ள ஒரு குடோனிற்கு இளைஞர் அண்ணாமலையை வரவழைத்து குடோனில் அடைத்து வைத்து சக்திவேல் மற்றும் விஜயகுமார் உள்ளிட்ட சிலர் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அப்போது இளைஞர் அண்ணாமலை மயங்கிய நிலையில் இரண்டு முறை தண்ணீர் தெளித்து மீண்டும் மீண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் காலணியாலும் தாக்கியதாகக் கூறப்படும் நிலையில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த இளைஞர் அண்ணாமலை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ஆம்பூர் காவல்துறையினர் இளைஞரை தாக்கிய சிறுமியின் தந்தை சக்திவேல் மற்றும் அவரது தாய்மாமன் விஜயகுமார் உள்ளிட்ட இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதேபோல் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் மாற்று சமூகத்தினரால் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

attack police thirupathur Untouchability
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe