சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்த பெண் அணிந்திருந்த தாலி செயினை மர்ம நபர்கள் பறித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரி என்பவர், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கால்நடைப் பராமரிப்பு உதவியாளர் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வந்தார். அப்போது, காமராஜர் சாலையில் தனது தம்பியுடன் நின்று பேசிக் கொண்டிருந்த போது, அவருக்கு பின்னே நின்றிருந்த இளைஞர் திடீரென வெங்கடேஸ்வரி அணிந்திருந்த தங்க செயினைப் பறித்து விட்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்று விட்டார்.
புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.