Advertisment

சிறுமியைத் திருமணம் செய்து குடும்பம் நடத்திய இளைஞர்!

young man who married the girl

Advertisment

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நல்லகவுண்டன் பாளையத்தைச் சேர்ந்தவர்விக்னேஷ் என்கிற முகமது ஆதம். இவர் சிறுமியை திருமணம் செய்ததாக கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறை ஊர் நல அலுவலராக பணிபுரியும் கிருஷ்ணவேணி என்பவர் புகார் கொடுத்தார்.

அந்தப் புகாரின் பேரில் கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தினர். இதில் முகமது ஆதம் 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்தச் சிறுமி தற்போது 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரிய வந்தது. இதனை அடுத்து கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர் போலீசார் முகமது ஆதம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe