Advertisment

வீடு புகுந்து திருடிய இளைஞன்... பொதுமக்கள் அடித்ததால் பலி!

The young man who involved in stealing

Advertisment

நாகையில் வீடு புகுந்து திருட முயன்ற இளைஞரை பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். அது தொடர்பாக இரண்டு நபர்களிடம் தீவிர விசாரணை நடந்துவருகிறது. நாகப்பட்டினம் டாட்டா நகர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது தாய் கண்ணம்மாள் மற்றும் மனைவி மலர்செல்வியுடன் வாழ்ந்துவருகிறார். நேற்று இரவு ஒரு மணி அளவில் காளிதாஸ் மீன்பிடிக்க கடலுக்கு புறப்பட்டுள்ளார். அப்பொழுது அவர் தனது வீட்டை சரியாக பூட்டாமல் சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டில் திடீரென சத்தம் கேட்டதையடுத்து மலர்செல்வியும், கண்ணம்மாவும் பார்த்துள்ளனர்.

25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் வீட்டின் பீரோவை திறந்து, அதில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டிருந்ததை கண்டனர். உடனே இவர்கள் கூச்சலிட முயன்ற போது அந்த இளைஞர் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். வீட்டை விட்டு இளைஞர் வெளியேறிய நேரத்தில் மலர்செல்வி 'திருடன் திருடன்' என சத்தமிட அருகிலிருந்தவர்கள் அந்த இளைஞரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து திருட்டில் ஈடுபட்ட இளைஞரை அருகில் இருந்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். பொதுமக்கள்அடித்ததில் படுகாயமடைந்த இளைஞரை நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

The young man who involved in stealing

Advertisment

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அந்த இளைஞர் உயிரிழந்தார். இதுகுறித்து நாகப்பட்டினம் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து காளிதாஸ் உள்ளிட்ட அவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த இளைஞர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

govthospital Theft Nagapattinam
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe