கடலூரில் வீட்டில் செடிகளுடன் செடியாக கஞ்சா செடியை வளர்த்த இளைஞரை காவல்துறை கைது செய்துள்ளனர்.
கடலூர் திருமலைநகரில் வசிப்பவர் குப்பன் மகன் ராஜ்கமல் (26). கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜ்கமல், அவரது வீட்டில் ஜாடியில் செடியோடு, செடியாக கஞ்சா செடியை வைத்து வளர்த்து வந்துள்ளார். இது குறித்து கடலூர் புதுநகர் காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் ராஜ்கமலின் வீட்டிற்கு சென்ற போலீசார் அவரது வீட்டில் இருந்த 4 அடி உயர ஒரு கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ராஜ்கமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.