young man who cheated young girl by pretending act cinema

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில்சிறு கிராமத்தைச் சேர்ந்தவர்25 வயதானஇளம்பெண். இவரது கணவர் டிரைவராக வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். அந்தப் பெண் தனது மாமனார் மாமியார் உடன் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

Advertisment

இவர் பயன்படுத்தி வந்த செல்போனில்பேஸ்புக் மூலம் சபரி என்பவருக்கு அறிமுகமாகியுள்ளார். அவர் அந்தப்பெண்ணை பல வாட்சப் குழுக்களில் சேர்த்து விட்டுள்ளார். அந்த குரூப்பின் வழியாக மதுரையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் அந்தப் பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார்.இவர்கள் வாட்சப்மூலம் ஒருவருக்கு ஒருவர் கருத்துப் பரிமாற்றங்களை செய்து நண்பர்களாகியுள்ளனர்.

Advertisment

இந்த நட்பை பயன்படுத்திக்கொண்ட ரவிக்குமார் அந்தப்பெண்ணிடம் நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்;உங்கள் குரல் வளம் நன்றாக உள்ளது.உங்களை நான் சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை உண்மை என்று நம்பிய அந்தப் பெண் தன் வீட்டிற்கு கடந்த நவம்பர் மாதம் ரவிக்குமாரை வரவழைத்துள்ளார். அப்போது ரவிக்குமார் அந்தப்பெண்ணிடம் நீங்கள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால், அதற்கு முன் உங்களை அழகான உடைகளில் புகைப்படங்கள் எடுக்க வேண்டும். அதை திரைப்பட தயாரிப்பாளர்,இயக்குநர்களிடம் காட்டி உங்களுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து புகைப்படம் எடுப்பதற்காக அந்தப் பெண்தன் அறைக்குச் சென்று ஆடம்பரமான உடை அணிந்து வருவதற்காக அவர் அணிந்திருந்த சுமார் எட்டு பவுன் நகையை கழட்டி வைத்து விட்டு அறைக்குள் சென்று உடைமாற்றி வருவதற்குசென்றுள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட ரவிக்குமார் அந்தப் பெண்கழட்டி வைத்திருந்த நகைகள் மற்றும் அவரின் செல்போன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். அதன் பிறகு அவரிடமிருந்து எந்த தொடர்பும் அந்தப் பெண்ணுக்குக் கிடைக்கவில்லை. இதன்பிறகு தான்மோசடியாக ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்தப் பெண் சின்னசேலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சினிமா ஆசை காட்டி நகையை அபகரித்துச் சென்றரவிக்குமாரை தீவிரமாகத்தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.