ஏமாற்றிய இன்ஜினியர்; திருமண மண்டபத்திற்குச் சென்று நீதி கேட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்

The young man who cheated... the pregnant woman went to the wedding hall and asked for justice

காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ளது ஒட்டுப்பட்டி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த நாகபிரியா என்பவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரை பிரிந்து தாய் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்நிலையில் திருமங்கலத்தைச் சேர்ந்த பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் சின்னசாமி என்பவருடன் நாகபிரியாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் உறவினர்கள் என்றும் கூறப்படுகிறது. நாகபிரியாவிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட நிலையில் நாளடைவில் அது காதலாக மாறியது.

பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த சின்னசாமி கடந்த இரண்டு வருடங்களாக நாகபிரியாவை காதலித்து வந்த நிலையில் அவர் கர்ப்பமாகியுள்ளார். தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என சின்னசாமியிடம் நாகபிரியாவலியுறுத்தியதால் திருமணம் செய்துகொண்டஇருவரும் வத்தலகுண்டு புறநகர் பகுதியில் வீடு ஒன்று எடுத்து வசித்து வந்தனர். இச்சூழலில் ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நாகபிரியாவை ஏமாற்றும் நோக்கத்தில் சின்னசாமி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்ததோடு, இதற்காக உறவினர்களுடன் சேர்ந்துவிமரிசையாக ஏற்பாடு செய்துள்ளார்.

திருமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற இருந்தது. இதனையறிந்து நாகபிரியா தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்ததோடு, காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு சின்னசாமிக்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நாளான இன்று காலை நேரடியாக பெற்றோர்களுடன் திருமணம் நடக்கவிருந்தஇடத்திற்கு வந்த நாகபிரியா நேரடியாகச் சென்று நியாயம் கேட்டார். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். தற்பொழுது சின்னசாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident madurai police
இதையும் படியுங்கள்
Subscribe