Advertisment

போதையில் விபத்து ஏற்படுத்திய இளைஞர்... காயமடைந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்த சிபிஎம் எம்எல்ஏ!!

k

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த சின்னத்துரை. ஓட்டு வீட்டிலிருந்து கோட்டைக்குப் போன சின்னத்துரை தொடர்ந்து சாமானிய மக்களின் தேவைக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இன்று மாலை புதுக்கோட்டையில் தனது பணிகளை முடித்துக் கொண்டு சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்த போது கந்தர்வகோட்டை மணிமேகலை என்ற பெண் வயல் வேலைகள் முடித்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது தாலுகா அலுவலகம் அருகே வாராப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் மது போதையில் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை மணிமேகலை மீது மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

சாலையில் விழுந்த மணிமேகலைக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிக் கிடந்தார். அந்த வழியாகச் சென்ற சின்னத்துரை எம்எல்ஏ தனது காரை நிறுத்திக் காயமடைந்து கிடந்த பெண்ணுக்குத் தண்ணீர் கொடுத்துவிட்டு கந்தர்வகோட்டை போலிசாருக்கு தகவல் கொடுத்து சம்பவ இடத்திற்கு வரவைத்தார். மது போதையில் விபத்து ஏற்படுத்திய இளைஞரை ஒப்படைத்துவிட்டுக் காயமடைந்திருந்த மணிமேகலையைத் தனது காரிலேயே ஏற்றிச் சென்று கந்தர்வகோட்டை தாலுகா மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காகப் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு மருத்துவர்களுக்கும் தகவல் சொல்லிவிட்டு வீட்டிற்குச் சென்றார். விபத்தில் சிக்கிய பெண்ணை தனது காரில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சின்னத்துரை எம்எல்ஏவை தொகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe