Advertisment

ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்... தர்ம அடி கொடுத்த பயணிகள்!

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் இளைஞர் ஜெகன். இவர் அதே பகுதியில் உள்ள இளம்பெண் ஒருவரை கல்லூரியில் படிக்கும்போது இருந்தே ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமாகியுள்ளது.இதனை அறிந்த ஜெகன் அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளதாக தெரிகிறது.

Advertisment

A young man who built a tali for a woman on a running bus tirupattur

டிசம்பர் 10 ந்தேதி காலை ஆம்பூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றுக் கொண்டு இருந்த பேருந்தில் பயணித்த அந்த இளம்பெண்ணின் கழுத்தில் ஜெகன் தாலி கட்டியுள்ளார். இதனால் பதற்றமடைந்த அந்தப் பெண் கூச்சலிட்டு கத்தியுள்ளார். பயணிகள் அதிர்ச்சியுடன் பார்த்தபோது விவகாரம் புரிந்துள்ளது. சத்தத்தால் அதிர்ச்சியான ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். பேருந்தில் இருந்த சக பயணிகள் ஜெகனை பிடித்து அடித்து உதைத்துள்ளனர். பின்புபேருந்தை வாணியம்பாடி காவல் நிலையத்துக்கு ஓட்டிச்சென்று ஜெகனை, காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அந்த பெண் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்களும் காவல் நிலையம் வந்துள்ளனர்.

Advertisment

இதுக்குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி காவல்துறையினர் ஜெகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் முதல் கட்டமாக, அந்த இளம் பெண்ணின் மீது ஒருதலைக்காதல் இருந்தது என தெரியவந்துள்ளது. நண்பர்கள் தந்த ஆலோசனைப்படியே பேருந்தில் தாலி கட்டியதாக கூறியுள்ளான். அதைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

peoples police youngerman woman running bus tirupattur district Tamilnadu
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe