/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/62_39.jpg)
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தறுத்துகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள ராதாபுரம் கிராமத்தை சேர்ந்த சுகன் என்பவரது மகளான 19 வயதான தரணிவிழுப்புரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் செவிலியர் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தரணி தனது வீட்டில் இருந்த தோட்டத்தில் இருந்தபோது, தோட்டத்தில் மறைந்திருந்த வாலிபர் ஒருவர் தரணியைப் பின்பக்கமாகப் பிடித்து அவரது கழுத்தை அறுத்துவிட்டுத்தப்பியோடியுள்ளார்.
தரணியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் சென்று பார்த்தபோது அவர் ரத்தவெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்குத்தகவல் கொடுக்க, உடனடியாக நிகழ்விடம் வந்த விக்கிரவாண்டி காவல்துறையினர் தரணியின் உடலை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், அந்தஇளைஞரையும் பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கணேஷ் என்ற 25 வயது இளைஞரை தரணி காதலித்து வந்ததாகவும், கணேஷ் கஞ்சாவிற்கு அடிமையானதால் அவருடனான பேச்சைதரணி குறைத்துக் கொண்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது எனவும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே தரணியை கணேஷ் கொலை செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தரணியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞர் கணேஷை காவல்துறையினர் இரண்டு மணிநேரத்தில் கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வீட்டில் இருந்தபோதே மாணவியை கழுத்தறுத்துகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)