Published on 13/12/2024 | Edited on 13/12/2024

சென்னை தரமணி காவல்நிலையத்தில் முதுநிலை காவலராக பணியாற்றி வரும் கண்ணன் என்பவர், அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு இருவர் சண்டையிட்டு வந்துள்ளனர்.
இதனையறிந்த காவலர் கண்ணன் சம்பவ இடத்திற்குச் சென்று சண்டையிட்டுக் கொண்டவர்களைக் கலைந்து செல்லும்படி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஒருவர் காவலர் கண்ணனை கிழே கிடந்த கல்லை எடுத்துத் தாக்கியுள்ளார். இதில் காவலர் கண்ணனுக்கு கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கண்ணனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், காவலரை தாக்கிய சங்கர்(29) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.