Skip to main content

தண்ணீர் இல்லாத கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

Published on 27/12/2024 | Edited on 27/12/2024
young man was found passed away in a well with no water

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் சுண்டாங்கிவலசை பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் மகன் அவினேஷ்(21). இவர் நேற்று இரவு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர், இரவு வீட்டிற்குச் செல்லவில்லை. அதனால் அவரது தாயார் அவினேஷ் நண்பர்களிடம் கேட்டுள்ளார். அதன் பிறகு உறவினர், நண்பர்கள் அந்தப்பகுதியில் தேடியுள்ளனர்.

அப்போது குளமங்கலம் வடக்கு கிராமத்தில் புதர்கள் அடர்ந்த ஆழமான கிணற்றில் அவினேஷ் சடலமாக கிடப்பது தெரிய வந்தது. இதனையடுத்து கீரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலீசார் சலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இளைஞர் அவினேஷ் எதற்காக இந்தப் பகுதிக்கு வந்தார்? அல்லது வேறு யாரேனும் அழைத்து வந்து தள்ளிவிட்டனரா? என்று விசாரணை செய்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்