Advertisment

கழிவறை அருகே இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்; காதல் ஜோடியை தேடும் போலீஸ்

young man tied a thali to a young woman near the toilet

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் பகல் நேரத்தில் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மூடப்படுவதாலும், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று நிறுத்தி விடுவதாலும்சற்று வெறிச்சோடி காணப்படும்.

Advertisment

இந்நிலையில், மார்ச் 14 ஆம் தேதி இரவு சுமார் 9 மணியளவில் பேருந்து நிலையத்திற்கு வந்த காதல் ஜோடியினர் அங்குள்ள கழிவறையின்பின்புறமாகச் சென்று யாரும் இல்லாததை அறிந்து அவசர அவசரமாக இளம்பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதனையறிந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் பேருந்து நிலையத்திற்கு வந்து பேருந்து நிலையத்தில் யாரும் இல்லாத இடத்தில் அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடியினர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என அங்குள்ள கடைகளில் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பேருந்து நிலையத்தில் சிசிடிவி பொருத்தப்படாததால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இரவு நேரங்களில் பேருந்து நிலையங்கள்மற்றும் ரயில் நிலையங்களில் காதல் ஜோடிகளின் அத்துமீறல்மற்றும் சமூகவிரோதச் செயல்கள் அதிகமாக நடப்பதாகவும், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

marriage police thiruppathur
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe