young man threatens college student that he will throw acid on her face

Advertisment

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிஅருகே உள்ளது அழகப்பா அரசு கலை கல்லூரி. இந்த கல்லூரியில், வணிகவியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி தீபிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தேசிய அளவில் பேட்மிட்டன்வீராங்கனையாக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதீபிகாவிற்கும்புதுக்கோட்டையைச் சேர்ந்த அவரது உறவுக்கார பையனான சத்யா என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பழக்கம்நாளடைவில் காதலாகவும் மாறியது. ஆனால், சத்யாவின் நடவடிக்கை பிடிக்காததால்தீபிகாசத்யாவிடம் இருந்துவிலகியுள்ளார். இதை விரும்பாத சத்யா, தன் காதலியான தீபிகா செல்லும் இடமெல்லாம் அவரை பின்தொடர்ந்து, அவருக்குத்தொல்லை கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில்இதைத்தாங்க முடியாத தீபிகாஇந்தச் சம்பவம் குறித்து உறவினர்களிடம் கூறிக் கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து, தீபிகாவின் உறவினர்கள்சத்யாவைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால்ஆத்திரமடைந்த சத்யா, தீபிகாவை பழிவாங்க வேண்டும் எனக் காத்துக்கொண்டிருந்தார். இந்நிலையில்,தீபிகா பேட்மிண்டன்போட்டித் தொடருக்காகஹைதராபாத் செல்லவிருந்தார். இதையறிந்த சத்யாஅவரது சித்திக்கு போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார். அதில் சத்யா பேசும்போது ''சித்தி.. அவங்க பொண்ண எவ்ளோ பத்திரமா பாத்துக்க முடியுமோ, பாத்துக்க சொல்லுங்க.. அவ மூஞ்சில ஆசிட் அடிக்காமநா விடவே மாட்டேன்'' எனப் பேசியுள்ளார்.

Advertisment

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள், அந்த ஆடியோவைதீபிகாவின் குடும்பத்தினரிடம் காண்பித்துள்ளார். பின்னர், சுதாரித்துக்கொண்ட தீபிகாவின் குடும்பத்தினர், தங்களதுமகளைஹைதராபாத்துக்கு அனுப்பினால்ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பயத்தில்தீபிகாவை வெளியில் எங்கும் அனுப்பாமல்வீட்டிலேயே வைத்திருந்தனர். இதையறிந்த சத்யாகடந்த 27 ஆம் தேதி பெண்ணின் வீட்டிற்கு ஆசிட் பாட்டிலுடன் சென்று தகராறு செய்துள்ளார். இளைஞரின் இச்செயலால் பதறிப்போன தீபிகாவின் குடும்பத்தார், சத்யா மீது போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து, தலைமறைவாக உள்ள சத்யாவைபோலீசார் தீவிரமாகத்தேடி வருகின்றனர்.

காதலிக்க மறுத்த பெண்னை, ஆசிட் அடித்து விடுவதாக இளைஞர் செல்போனில் மிரட்டிய சம்பவம்காரைக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.