சென்னை பம்மலில் முன்னாள்அதிமுக கவுன்சிலரின் மகன் பட்டாகத்தியுடன் இளைஞர் ஒருவரை வெட்ட முயலும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை பம்மல் பகுதியில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் 57வது ஆண்டு கொடி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் திடீரென இரண்டு தரப்பிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அதிமுகமுன்னாள் கவுன்சிலர் லியோன் என்பவரின் மகன் லியோன்டா பட்டாக்கத்தியால் எதிர்த்தரப்பு இளைஞரை தாக்க முயன்றார். அங்கிருந்த நபர்கள் லியோன்டாவை தடுத்து நிறுத்தியதோடு இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.