Advertisment

மதுபோதையில் தகராறு; நண்பரை கத்தியால் குத்திய இளைஞர்!

young man stabbed a friend in a drunken dispute

திருச்சி மாவட்டம் துவாக்குடி அருகே வாழவந்தான் கோட்டையில், இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்கள் (அகதிகள் முகாம்கள்) அமைந்துள்ளது. இதில் தொகுதி 1ல் வசித்து வருபவர் ராஜீவ் பிரசாத் (36). அகதிகள் முகாம் தொகுதி 2 ல் வசித்து வருபவர் ம. குமார் (35). பெயிண்டர்களான இவரும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். செவ்வாய்க்கிழமை இரவு இருவரும் ராஜீவ் பிரசாத் வீட்டில் அமர்ந்து அருந்தியுள்ளனர்.

Advertisment

மதுபோதையிலிருந்த இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் தகராறாக மாறி ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். இதில், ஆத்திரமடைந்த குமார், ராஜீவ்பிரசாத் வீட்டில் இருந்த காய்கள் நறுக்க வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து ராஜீவ் பிரசாத்தை சர மாரியாக குமார் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராஜீவ் பிரசாத்திற்கு முதல் கட்ட சிகிச்சை அளித்தனர்.

Advertisment

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ராஜீவ்பிரசாத்தின் மனைவி விஜித்தா (37) துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

trichy police
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe