Advertisment

திருமணமான பெண்ணுடன் வாலிபர்...கண்டித்த சித்தி...நடந்த விபரீதம்!

சென்னையில் திருமணமாகி கணவரை இழந்த பெண்ணுடன் வாலிபர் தொடர்பு வைத்ததை கண்டித்த சித்தியால் அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது. இது பற்றி விசாரித்த போது, சென்னையின் அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார் எனும் வாலிபர். இவர் சிறு வயது இருக்கும் போதே பெற்றோரை இழந்துள்ளார். இதனால் தனது சித்தி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் அதே பகுதியில் இருக்கும் பரிமளா என்ற பெண்ணுடன் நடப்பாக பழகி வந்துள்ளார். அப்போது பரிமளா ஏற்கனவே திருமணமாகி கணவனை இழந்துள்ளார் என்ற விஷயம் மனோஜ்குமாருக்கு தெரிய வந்துள்ளது. மேலும் கணவனை இழந்த பரிமளாவிற்கு 13 வயதில் ஒரு மகள் உள்ளார் என்பதும் மனோஜ் குமாருக்கு தெரிந்துள்ளது. இருந்தாலும் நட்பாக பழகி வந்த மனோஜ்குமாருக்கு நாளடைவில் பரிமளா மீது காதல் மலர்ந்துள்ளது.

Advertisment

youngster

பின்பு இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். இதை அறிந்த மனோஜ்குமாரின் சித்தி இவர்களது உறவை கண்டித்துள்ளார். மேலும் பரிமளாவிடம் இனிமேல் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது என்றும் கூறியுள்ளார். ஆனால் அவரது சித்தி பேச்சை கேட்காமல் மனோஜ் பரிமளாவை வீட்டுக்குக் கூட்டி வந்து ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். இதனால் மனோஜுக்கும் அவரது சித்திக்கும் இடையே தினமும் சண்டை நடந்துள்ளது. இதனால் ஒரு கட்டத்தில் பரிமளா மனோஜை விட்டு பிரிந்து விடலாம் என்று எண்ணியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து விரக்தியடைந்த மனோஜ் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலீஸார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

incident Relationship young girl parents Young Men Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe