young man passes away by mysterious person

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டை அர்ஜுனன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் மணிவாசகம் (21). இவர் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (05.05.2021) மேலகல்கண்டார் கோட்டை ஆலத்தூர் பாலத்தின் அருகே மணிவாசகம் நடந்து சென்றபோது, அங்கு வந்த மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் மணிவாசகத்தை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றனர்.

Advertisment

இதுகுறித்து தகவலறிந்த பொன்மலை போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.அப்போது உறவினர்கள், கொலையாளிகளைக் கைது செய்தால் மட்டுமே நாங்கள் உடலை எடுக்கவிடுவோம் என வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதி அளித்ததால் உறவினர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் மணிவாசகத்தின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

இதுகுறித்து பொன்மலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆள் நடமாட்டம் மிக்க பிரதான சாலையில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தக் கொலை வழக்கு தொடர்பாக நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டையில், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்து காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.