Advertisment

நடைபாதையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட வாலிபர்!

The young man who passed away

Advertisment

திருச்சி திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரயில் நிலையநடைபாதையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தூக்கில் பிணமாக தொங்குவதைப் பார்த்த பயணிகள் திருவறும்பூர் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல்துறையினர், அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக இங்கு வந்தார்? ஏன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

railway station trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe