Advertisment

காதல் திருமணம் செய்த இரண்டே நாளில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

young man passed away two days after his love marriage

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சொரக்காபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழரசன் மகன் அஜித். இவர் தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். உதகையை சேர்ந்த ஜான்சன் என்பவரின் மகள் ராதிகா சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வந்துள்ளார். இந்த நிலையில் அஜித்துக்கும் ராதிகாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறியுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து கடந்த 3 ஆம் தேதி ராதிகாவை அஜித் தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர்களின் குலதெய்வம் கோவிலில் அஜிதிற்கும், ராஜிகாவிற்கும் தமிழரசன் திருமணம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து5 ஆம் தேதி பதிவு திருமணம் செய்வதற்கான தகவல்களை விசாரித்து வருவதற்காக அஜித் வீட்டில் இருந்து கிளம்பி தனியாக சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த போலீசார், ஆரணி தாலுகா காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காணமால் போன அஜித்தை தேடி வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் அத்திமூரை அருகே உள்ள காட்டுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் உடல் மரத்தில் தொங்கிக்கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்குவிரைந்து சென்று மரத்தில் தொங்கிக்கொண்டிருப்பது அஜித் என்பதை உறுதிசெய்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமான இரண்டே நாளில் அஜித் மரத்தில் பிணமாக தொங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு எதாவது பிரச்சனையா என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

thiruvannamalai police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe