/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/youth-murder-in-track.jpg)
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர்கள் மாரியப்பன் - அமுதா தம்பதியர். மெக்கானிக்கல் என்ஜீனியரான இவர்களது மகன் பாண்டியராஜன், நேற்று (17.11.2021) காலையில் பெற்றோரிடம் வயலுக்குச் சென்றுவருகிறேன் எனக் கூறிச் சென்றார். ஆனால், மதியம் வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மகனைத் தேடிச் சென்றபோது பாண்டியராஜன் வயல் அருகே ரயில்வே தண்டவாளத்தில் பிணமாகக் கிடந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் திருச்சி ரயில்வே காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலைக் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது பாண்டியராஜனின் உறவினர்கள் அவரது சாவில் மர்மம் உள்ளது என தெரிவித்தனர். ‘கடந்த சில தினங்களுக்கு முன்பு பாண்டியராஜனின் வயலில் பணியில் இருந்தபோது அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்கள்தான் பாண்டியராஜனை கொன்று உடலை தண்டவாளத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். எனவே இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்த வேண்டும்’ என புகார் செய்துள்ளனர். இதுகுறித்து துவாக்குடி காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)