Young man passed away in puthukottai

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த ரெங்கசாமி என்பவரின் மகன் அருள் (38). இவர், கீரமங்கலம் சந்தைப்பேட்டையில் சிறிய ஓட்டல் ஒன்றை நடத்திவருகிறார். அந்த ஓட்டலை மூடிவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் சென்ற போது நடுவழியில் பெட்ரோல் இல்லாமல் அவரது வண்டி நின்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தனது நண்பன் சின்ராசுவிடம் பெட்ரோல் வாங்கிவரச் சொல்லிவிட்டு அங்கு நின்ற போது, அருகில் உள்ள வீட்டில் நின்ற நாய் குரைத்துள்ளது. அந்த நாயை விரட்டிய அருள் கம்பெடுத்து தாக்க முயன்ற போது நாயின் உரிமையாளர் நாயை அடிப்பதை பற்றி கேட்க வாய்த்தகராறு ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்த சம்பவத்தையடுத்து வீட்டிற்கு சென்ற அருள், மீண்டும் பாதியில் திரும்பி வந்து நாயை அடிக்க சென்றுள்ளார். இதனால் மீண்டு தகராறு ஏற்பட்ட நிலையில் வேம்பங்குடி கிழக்கு அண்ணாத்துரை மகன் தினேஷ் மற்றும் அவரது நண்பரான கீரமங்கலம் தர்மர்கோயில் தெரு அண்ணாத்துரை மகன் மதனும் அருளை தாக்க கீழே விழுந்துள்ளார்.

Advertisment

கீழே விழுந்த அருள், கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்ற பிறகு வாந்தி எடுத்து மயக்கமடைந்த நிலையில் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அருளின் மனைவி சுதா, கீரமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தினேஷ், மதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Young man passed away in puthukottai

இந்த நிலையில், அருள் கொலைக்கு நீதி வேண்டும் உரிய இழப்பீடு வேண்டும் என்று சடலம் ஏற்றி வந்த வாகனத்தை மறித்து அருளின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். போலிஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பிறகு மறியலை கைவிட்டு சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்றனர்.