young man passed away Omni bus accident Trichy

திருச்சியில் ஆம்னி பேருந்து கவிழ்ந்தவிபத்தில் கால் துண்டிக்கப்பட்ட இளைஞர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

Advertisment

திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக அந்தப் பகுதியை கடக்கும் வாகனங்கள் மணிகண்டம் சர்வீஸ் சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை சென்னையில் இருந்து தென்காசிக்கு 31 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து மணிகண்டம் பகுதியில் அதிவேகமாக சென்றதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்ததும் பேருந்து ஓட்டுனர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த விபத்தில் தென்காசியைச் சேர்ந்த சக்தி விக்னேஷ் (19) என்கிற இளைஞருக்கு இடது கால் துண்டானது. இதனைத் தொடர்ந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து ஓட்டுனர் மது போதையில் இருந்ததாக பயணிகள் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மணிகண்டம் போலீசார் இரண்டு கிரேன் உதவியுடன் பேருந்தை நிலை நிறுத்தினர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்தபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment