/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_2285.jpg)
நாகையை அடுத்த பொரவாச்சேரி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (42). இவர், நாகை பழைய பஸ் நிலையத்தில் பழக்கடை ஒன்றை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று மாலை நாகையில்பள்ளியில் படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக பொரவாச்சேரியில் இருந்து ஸ்கூட்டரில் நாகைக்கு சென்று கொண்டிருந்தார். நாகை வ.உ.சி.தெரு அருகே சென்ற போது பின்னால் மதுரையில் இருந்து நாகைக்கு வந்து கொண்டிருந்த அரசு பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த கார்த்திக், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)