Advertisment

போதையில் பள்ளிச் சிறுமியிடம் அத்துமீறிய இளைஞர்; பொள்ளாச்சியில் பரபரப்பு

young man misbehaved with a schoolgirl while intoxicated

கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் பெண்கள் மேல் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் சிறார் மாணவி ஒருவர், கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மாலை பள்ளி முடிந்ததும், வீட்டுக்கு அழைத்துச் செல்ல தனது தந்தை வருகைக்காகப் பள்ளி முன்பு காத்திருந்துள்ளார். ஆனால், மாலை 6 மணி கடந்தும் மாணவியின் தந்தை வரவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisment

இதனால், பதற்றத்துடன் சிறுமி காத்திருந்துள்ளார். அப்போது, அந்த வழியாகத் தலைக்கேறிய மதுபோதையில் போதை ஆசாமி ஒருவர் வந்துள்ளார். அவர், தந்தையின் வருகைக்காகக் காத்திருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதைச் சற்றும் எதிர்பாராத அந்த சிறுமி உதவிக்கேட்டுக் கூச்சலிட்டுள்ளார். உடனே, ஓடி வந்த பள்ளி வாட்ச்மேன் சிறுமியை மீட்டு, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த, மகாலிங்கபுரம் போலீசார் தலைக்கேறிய மதுபோதையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போதை ஆசாமியைப் பிடித்து, மகாலிங்கபுரம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு, காவல் நிலையத்தில் பொள்ளாச்சி உட்கோட்ட காவல் நிலைய துணைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் இருந்தார். அப்போது, போலீஸ் வாகனத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட போதை ஆசாமி, ஸ்டேஷன் வாசலில் ரகளையில் ஈடுபட்டார். சட்டை மற்றும் பேண்டை கழட்டிய அந்த ஆசாமி அரை நிர்வாண கோலத்தில் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் உடைத்து வீசினார்.

தொடர்ந்து, எல்லை மீறிக் காவல் நிலையத்தின் வளாகத்தில் செயல்பட்டவரைக் காவல் நிலையத்தின் உள்ளே அழைத்துச் சென்று தங்களது பாணியில் விசாரணை நடத்தினர். அதில், தலைக்கேறிய மதுபோதையில் சிறுமியிடம் அத்துமீறியது காங்கேயம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பது தெரிய வந்தது. மேலும், பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் பிரியாணி கடையில் மாஸ்டராக மணிகண்டன் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

இதனிடையே, பாலியல் அத்துமீறலுக்கு உள்ளான சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பிரியாணி மாஸ்டர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, மகாலிங்கபுரம் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு போதை ஆசாமிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, போக்சோவில் கைது செய்யப்பட்ட பிரியாணி மாஸ்டர் மகாலிங்கபுரம் காவல்நிலையத்தில் ஆடையைக் கழற்றி அலப்பறை செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

police Coimbatore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe