குடிபோதையில் 78 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை;  வாலிபருக்கு வலை!     

  young man misbehaved with a 78-year-old woman while drunk

இடைப்பாடி அருகே, குடி போதையில் 78 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே உள்ள இருப்பாளி பூசாரி மூப்பர்வலவைச் சேர்ந்தவர் கந்தன். இவருடைய மனைவி ராமாயி (78). மே 20 ஆம் தேதி இரவு, அப்பகுதியில் உள்ள கந்தமாரியம்மன் கோயில் திடலில் தெருக்கூத்து நடந்தது. ராமாயி, தெருக்கூத்தை பார்த்துவிட்டு இரவு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக குடி போதையில் வந்த அடையாளம் தெரியாத 25 வயது வாலிபர் ஒருவர், மூதாட்டி என்றும் பாராமல் ராமாயியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். வலி தாங்க முடியாமல் மூதாட்டி அலறிய சத்தம் கேட்டு பொதுமக்கள் சிலர் அங்கு ஓடி வந்தனர்.

அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். ராமாயியை மீட்டு, இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக பூலாம்பட்டி காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

police Salem
இதையும் படியுங்கள்
Subscribe