young man misbehaved with a 5-year-old girl

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 5வயது சிறுமி தனது வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வழியாக வந்த சக்திவேல் என்ற வாலிபர் சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று விவசாய நிலத்தில் வைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்பு அங்கிருந்து, புகார் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாற்றப்பட்டது. பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், சக்திவேல் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை எனத் தெரியவந்தது. இதனை அடுத்து சக்திவேலை கைது செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைத்தனர்.