/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/553_8.jpg)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகிலன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). 21 வயதான இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். முகிலன் தன் ஊரைச் சேர்ந்த திருமணமான 26 வயதான பெண்ணுக்கு வாட்ஸாப்பில் குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.
இது குறித்து அப்பெண்ணின் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. பெண்ணின் உறவினர்கள் முகிலனைக் கண்டித்தும், தனது செயல்களை முகிலன் நிறுத்தாததால் உறவினர்கள் அதிருப்தியில் இருந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்குமுன் முகிலன் அப்பெண்ணின் வீட்டிற்கு நேரடியாகச் சென்றுள்ளார். குடிக்கத்தண்ணீர் வேண்டும் எனக் கேட்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இதனைக் கண்ட பெண்ணின் உறவினர்கள் 3 பேர் முகிலனை பெண்ணின் வீட்டிற்குள் பிடித்து வைத்து அடித்துள்ளனர். அவரது வாயினை மூடி கை, கால்களைக் கட்டி நிர்வாணப்படுத்தியுள்ளனர்.
வீட்டில் இருந்த சொம்பினை எடுத்து அதை கேஸ் அடுப்பில் வைத்து சூடுபடுத்தி முகிலனின் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்ததாகக் கூறப்படுகிறது. வலியில் அலறிய முகிலனின்வாயில் துணி வைத்து அடைத்ததால்அவரது அலறல் சத்தம் வெளியில் கேட்கவில்லை. முகிலனின் உடலில் 8 இடங்களில் சூடுவைத்த அந்த நபர்கள், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதன் பின் மூன்று நபர்களும் அவரை கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமத்தித்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
தகவல் அறிந்த கச்சிராப்பாளையம் காவல்துறையினர் முகிலனை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போதுமுகிலன் தனக்கு நடந்ததை வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார். இதையடுத்துதலைமறைவாகியுள்ள மூவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)