பெண் வேடத்தில் ஆண் ஒருவரின் சடலம் சுடுகாட்டில் மீட்கப்பட்ட சம்பவமானது கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்த போது அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. கேரள மாநில கண்ணூர் பகுதியில் மூன்று மாதம் முன்னர் வனப்பகுதியில் இருந்து பெண் வேடத்தில் ஆணின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், கேரளா மாநிலத்தில் கண்ணூர் எனும் இடம் அமைந்துள்ளது. இப்பகுதிக்குட்பட்ட சூழலி எனும் கிராமத்தில் வாடகை வீட்டில் சசி என்று அடையாளம் தெரியவந்துள்ளது. இவருக்கு வயது 45. பகல் முழுவதும் மர வேலை தொடர்பான பணியை செய்து வந்துள்ளார் சசி.

Advertisment

incident

ஆனால் இரவானதும் பெண்களுக்கான உடை அணிந்து அந்த கிராமப்பகுதியில் வலம் வந்துள்ளார். மட்டுமின்றி பெண்கள் போன்று நகைகள் அணிந்து கொள்வதிலும் ஆர்வம் காட்டியுள்ளார்.அடுத்த சில வாரங்களில் புடவை அணிந்தவாறு ஆளில்லாத நேரத்தில் பேய்களை போன்று சுடுகாட்டில் வளம் வருவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். பேய் வேடத்தில் வலம் வர தொடங்கிய பிறகுதான் சுடுகாட்டில் படுத்து உறங்குவதை வழக்கமாக தொடங்கியுள்ளார். விடிந்தவுடன் வழக்கம்போல ஆணாக மாறி தன்னுடைய வேலைக்கு சென்று விடுவார். இவரால் அப்பகுதி பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுகளும் ஏற்படவில்லை.இவர் இறந்து கிடந்த இடத்திற்கு அருகே விஷ பாட்டில்கள் இருந்துள்ளன. இதனால் சசி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் விறகு எடுக்க வந்த பெண்களே முதலில் சசியின் சடலத்தை கண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சசியின் உடலை போலீஸார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

selfie