/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/died-1_40.jpg)
திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். தனியார் ட்ராவல்ஸ்நடத்திவந்த இவர் அதிக கடன் சுமைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கு இடையில் அவருடைய மனைவிக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர்.
எனவே தன்னுடைய டிராவல்ஸ் நிறுவனத்தில் இருந்த ஆறு பேருந்துகளில் நான்கு பேருந்துகளை விற்று தன்னுடைய ஒட்டு மொத்த கடனையும் முழுமையாக அடைத்துள்ளார். இருப்பினும் தொடர்ந்துமனச்சோர்வில் இருந்த சங்கர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அறிந்த காவல்துறையினர் சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து தொடர் விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)