young man made a college student pregnant

நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் மாணவிக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவியின் தாய் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் மாணவியின் வயிற்றை மருத்துவர் ஸ்கேன் செய்து பார்த்தபோது மாணவி இரண்டு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், மாணவியிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது, களியல் பகுதியைச் சேர்ந்த அஜய்(20) என்ற இளைஞருடன் மாணவிக்கு இன்ஸ்டாகிரம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் அடுத்தகட்டத்திற்குச் சென்ற நிலையில் இருவரும் கைப்பேசி எண்களை பரிமாறிக்கொண்டு உரையாடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் இதனைத் தொடர்ந்து மாணவியை ஒரு விடுதி அறைக்கு அழைத்துச் சென்று அஜய் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாணவியின் தயார் கொடுத்த புகாரி பேரில் போக்சோ வழக்குப் பதிவு செய்த மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.