young man lost their life because the woman he loves does not speak

திருவொற்றியூர் சிப்பாய் செல்வகுமார் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம்(22) என்பவர் மாதவரத்தில் கூலி வேலை செய்துவருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரைக் கடந்த 4 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 2 நாட்களாக சிவலிங்கத்திடம் பேசாமல் தவித்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிவலிங்கம் மன உளைச்சலில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கிட்டு சிவலிங்கம் தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்ற அவரது தாய் வீட்டிற்கு வந்தபோது தூக்கில் தொங்கிக்கொண்டிருந்த மகனைப் பார்த்து அதிர்ச்சியடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

Advertisment

தகவலின் பேசில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிவலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.