Young man lost his money in financial institution ..

திருச்சி மாவட்டம், பிராட்டியூர் பகுதியைச் சேர்ந்த மிதுன், திருச்சி டோல்கேட் பகுதியில் உள்ள இயல்ஃபின் என்ற நிதி நிறுவனத்தில் அவருடைய பணத்தையும், அவரது நண்பர்களின் பணத்தையும் முதலீடு செய்துள்ளார். இப்படி அவர் முதலீடு செய்த மொத்த தொகை சுமார் 72 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்.

Advertisment

முதலீடு செய்த பணத்திலிருந்து மூன்று மடங்காக குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பித் தருவதாக உரிமையாளர் ராஜா மற்றும் ரமேஷ் ஆகியோர் கூறியுள்ளனர்.அவர்கள் கூறியபடி இதுவரை 4 கோடியே 68 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மிதுனுக்கு தர வேண்டியுள்ளது. அத்தொகையை அவர் கேட்டபோது, ராஜா மற்றும் ரமேஷ் திருப்பித்தர மறுத்துள்ளனர்.

Advertisment

Young man lost his money in chit fund

இதனைத் தொடர்ந்து மிதுன், காவல்துறையில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், மேற்குறிப்பிட்ட விஷயங்களுடன் பணத்தைப் பெறுவதற்காக பலமுறை நேரில் சென்று கேட்டபோது அங்கிருந்த நிறுவன உரிமையாளர் ராஜா, ரமேஷ் உள்ளிட்ட இன்னும் பலர் தங்களை மிரட்டி, அவர்கள் கொடுத்திருந்த காசோலையையும் பறித்துக்கொண்டு விரட்டிவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அந்நிறுவனத்தில் மிதுனை மிரட்டிய 4 பேரை கைது செய்தனர்.