/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20240504-WA0008.jpg)
திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 27). இவர் தனியார் செல்போன் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் விஸ்வநாதன் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பெண்ணின் பெற்றோர் விஸ்வநாதனுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மன உளைச்சலில் காணப்பட்ட விஸ்வநாதன் நேற்று வீட்டின் அருகில் உள்ள தென்னூர் மீனாட்சி அம்மன் தோப்பில் கொட்டகையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததில்லைநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் பிணமாக தொங்கிய விஸ்வநாதன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)