Advertisment

கெத்து காட்ட நினைத்து விரல்களை இழந்த இளைஞர்

The young man lost his fingers trying to show off

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்துள்ளது சின்ன ஏலகிரி பகுதி. இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளதால் வடமாநில இளைஞர்கள் அதிகம் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலைஒன்றில் வேலை செய்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செயா பெனகுலா என்ற இளைஞர் தீபாவளியன்று கெத்து காட்டுவதாக நினைத்து பாம் வெடியை கையில் பிடித்து தீ வைத்து வீசியுள்ளார்.

Advertisment

மதுபோதையில் இருந்த தனஞ்செயா பெனகுலா, வெடியில் தீ பிடிக்கவில்லை என்று நினைத்து கையில் வைத்திருந்தபோது திடீரென கையோடு பாம் பட்டாசு வெடித்து சிதறியது. இதனால் பட்டாசை பிடித்திருந்த வலது கையின் அனைத்து விரல்களும் துண்டு துண்டாகச் சிதறியது. மது போதையில் இருந்ததால் தனக்கு என்ன நேர்ந்தது என்று தெரியாமல் கிடந்த பெனகுலாவை அவரது நண்பர்கள் தூக்கிச் சென்று ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகசேர்த்தனர்.

Advertisment

diwali Krishnagiri
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe