Advertisment

மரணத்திலும் பிரியாத நட்பு; நண்பன் இறந்த துக்கத்தில் இளைஞர் மரணம்!

Young man lost  in grief over friend passed away

திருச்சி மாவட்டம் கே.கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் செல்வம்(55). இவரும் ஜி நகரைச் சேர்ந்த பாஸ்கரனும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே கொத்தனாரான செல்வத்திற்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையி கடந்த 3 ஆம் தேதி கொத்தனார் செல்வம் அந்த பகுதியில் வேலை செய்துகொண்டு இருந்துள்ளார். அப்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் கதறி அழுதுள்ளார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து நண்பர்கள் உறவினர்கள் அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது உடல் கே.கள்ளிக்குடியில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் நெருங்கிய நண்பர் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதரிச்சியடைந்து ஓடி வந்த பாஸ்கரன், செல்வத்தின் உடலைப் பார்த்துக் கதறி அழுதுள்ளார். அப்போது திடீரென பாஸ்கரனும் அதே நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கு இருந்தவர்கள் பாஸ்கரனை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Advertisment

மருத்துவமனையில் பாஸ்கரனை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைகேட்டு சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் அழுது தீர்த்தனர். நண்பனை விட்டு மரணத்திலும் பிரியாத பாஸ்கரனின் இழப்பு அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

friends trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe