
அண்மையில் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்த வீடியோ ஒன்றுவைரலாகி இருந்தது. அதில் இளைஞர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற நிலையில், பின்புறம் அமர்ந்திருந்த இளைஞர் கல்லூரி மாணவிகள் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த இடத்தில் கெத்துக்காட்டும் நோக்கத்துடன் எழுந்து நிற்க முயன்றார். இவ்வாறு செய்ய முயன்ற அந்த இளைஞர் திடீரென கால் இடறி வாகனத்தில் இருந்துகீழேவிழுந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு ட்ரோல் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் இது தொடர்பாக போலீசார் விசாரிக்கையில் இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் நிகழ்ந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தை ஓட்டியவர் மற்றும் மற்றொருஇருசக்கர வாகனத்தில் இவர்களை பின் தொடர்ந்து வீடியோ எடுத்தவர்கள் என மொத்தம் மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us