கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வி.என்.ஆர் நகரில் உள்ள காமல் பாஷா தெருவில் வசித்து வருபவர் ஜாபர் அலி. இவர் நேற்று வழக்கம் போல் தனது வீட்டில் குடும்பத்துடன் தூங்கியுள்ளார். தூங்கும்போது ஒரு விதமான சத்தம் கேட்பது போல் உணர்ந்துள்ளார். பின்னர் இன்று அதிகாலை தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை பரிசோதித்து பார்த்துள்ளார். அப்போது தெருவில் ஒருவர் எவ்வித ஆடையுமின்றி நடந்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவானதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Advertisment

The young man entering the houses naked at night! A thief? Mental illness? Police are investigating!

மேலும் நிர்வாணமாக அலைந்த அந்த வாலிபர் வீடுகளில் ஜன்னல் கதவுகள் வழியாக எட்டிப் பார்ப்பது, படிக்கட்டில் ஏறுவது என அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால் எவ்வித வீடுகளிலும் பொருட்கள் திருடவில்லை. இப்பகுதியில் இதுபோல பல இரவுகளில் பல வீடுகளுக்குள் நுழைந்துளள்ளார். இதுகுறித்து விருத்தாச்சலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

அவர் விநோதமான திருடனா? அல்லது தவறான நோக்கத்தில் வீடுகளில் நோட்டம் விடுகின்றாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? என பல கோணங்களில் போலீசார்விசாரித்து வருகின்றனர். எவ்வித ஆடையுமின்றி நிர்வாணமாக சுற்றும் வாலிபரின் கீழ்த்தரமான செயலால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.