A young man borrowed a scooty from a woman; the incident end sad

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான சத்யா என்ற பெண் வீட்டில் இருந்த பொழுது இரவு சுமார் 9 மணி அளவில் அவரது வீட்டிற்கு வந்த அருள் என்ற இளைஞர் அந்த பெண்ணிடம் அவரது ஸ்கூட்டியை கேட்டுள்ளார்.

Advertisment

தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லாததால் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்க வேண்டும் என்று கூறி ஸ்கூட்டியை கேட்டபோது நீங்கள் யார் என்று தெரியாது உங்களுக்கு நான் ஏன் எனது ஸ்கூட்டியை கொடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் கூறி உள்ளார். அப்போது அந்த பெண்ணிடம் வண்டி கேட்ட அருள் ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Advertisment

அதன் பின் அந்த இளைஞர் அங்கிருந்து சென்ற நிலையில் அந்தப் பெண்ணின் உறவினர்களான கவியரசன் மற்றும் சிலம்பரசன் அங்கு வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்களிடம் அந்தப் பெண் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவியரசன், சிலம்பரசன், இவர்கள் நண்பர் சிலரும் இருவரும் அருளைத் தேடி உள்ளனர். அவர்கள் இருவரும் இல்லாததால் அருளின் தாய்மாமன் ஏழுமலை வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளனர். அப்போது அங்கு வந்த ஏழுமலையின் தாய் மாமன் நாராயணன், கவியரசன் மற்றும் சிலம்பரசனிடம் சமாதானம் பேசிய நிலையில் அங்கிருந்து வீட்டிற்கு சைக்கிளில் வந்த 65 வயதான நாராயணனை கவியரசன் மற்றும் சிலம்பரசன் ஆகிய இருவரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நாராயணன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் விரைந்து வந்த போலீசார் படுகொலை செய்யப்பட்ட நாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். நாராயணன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கிளாபாளையம் கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தப்பி ஓடி தலை மறைவான கவியரசன், சிலம்பரசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisment