Advertisment

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இளைஞருக்கு நேர்ந்த சோகம்

young man attending wedding reception incident 

Advertisment

செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்தவர் மணி பிரசாந்த் (வயது 21). இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருடன் பணியாற்றிய இளம்பெண் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அம்பத்தூரில்உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மணி பிரசாந்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெகுநேரமாக நடனமாடியுள்ளார்.

அப்போது, திடீரென மணி பிரசாந்துக்கு வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்நிலையில், அவர் சிறிது நேரத்தில்மயங்கி விழுந்தார். இதைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் மற்றும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மணி பிரசாத் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு உடன் வந்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மணி பிரசாந்த் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாகபோலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

hospital police Chennai Chengalpattu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe