young man assaulted an 85-year-old woman

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி நல்லம்மாள் (85). இவர் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் நித்திய ராஜவேலன் (27). கூலித் தொழிலாளி.

Advertisment

இவர், கடந்த 3 நாள்களுக்கு முன்பு நல்லம்மாளிடம் மது குடிக்கப் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், நல்லம்மாளை தாக்கியதுடன், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் மூதாட்டி காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நேற்று முன்தினம் நல்லம்மாள் அளித்த புகாரின் பேரில், நாமகிரிப்பேட்டை காவல்துறையினர் நித்திய ராஜவேலன் மீதுவழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவரை ராசிபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

Advertisment