/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/police 600_2.jpg)
திருவெண்ணெய்நல்லூர் அருகே 16 வயது சிறுமியைக் கடத்திய ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை கடந்த 17ஆம் தேதி முதல் திடீரென காணவில்லை என அவரது குடும்பத்தினர் பல இடங்களில் சிறுமியை தேடிபார்த்தனர். எந்த தகவலும் கிடைக்கவில்லை இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திருவெண்ணைநல்லூர் காவல்துறையில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரைப் பதிவுசெய்து காவல்துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், காலனியை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் பிரபு தேவா (22) என்பவர் சிறுமியைக் காதலிப்பதாக கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.
16 வயது சிறுமியைக் கடத்தி சென்ற குற்றத்திற்காக காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் பிரபுதேவாவை கைது செய்துள்ளனர். மைனர் பெண்ணை கடத்திய குற்றத்திற்காக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பிரபுதேவா.
Follow Us