Advertisment

சிறுமி வன்கொடுமை; சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்!

young man arrested under pocso act

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர், கடந்த டிசம்பர் 15ஆம் தேதி, தனது பெற்றோர்களுடன் வெளியூர் சென்றுவிட்டு தனது ஊருக்குச் செல்வதற்காக பஸ் நிலையத்தில்காத்திருந்தார். அப்போது அங்கு வந்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் விஜயசுந்தரம்(27) தனது மொபைல் எண்ணை துண்டுச் சீட்டில் எழுதி மாணவி அருகே போட்டுச்சென்றுள்ளார். அந்தச் சீட்டை எடுத்த அந்த மாணவி பெற்றோருக்குத் தெரியாமல் விஜய் சுந்தரத்திற்கு ஃபோன் செய்துள்ளார்.

Advertisment

விஜயசுந்தரம் புதுச்சேரியில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். மாணவியை திருமணம் செய்ய ஆசைப்படுவதாகக்கூறி, மாணவியிடம் சம்மதம் கேட்டு ஃபோனில் தொடர்ந்து பேசியுள்ளார். இதன்பிறகும்இருவரும் அடிக்கடி ஃபோனில் பேசி உள்ளனர். மாணவிக்குச் சம்மதம் இருந்ததால், அந்த மாணவி படிக்கும் பள்ளிக்குச் சென்ற விஜயசுந்தரம், மாணவியைத் தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதேபோல் செஞ்சிக்கோட்டை உட்பட பல்வேறு இடங்களுக்கு அவ்வப்போது அழைத்துச் சென்று மாணவியை பாலியல் ரீதியாகப் பலமுறை வன்கொடுமை செய்துள்ளார். இதனால் சமீபத்தில் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையொட்டி, மாணவியைஅவரது பெற்றோர்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர்.

Advertisment

அப்போது,மாணவிபாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாகவும்அதனால் மாணவியின்உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, மாணவியிடம் விசாரணை நடத்தி 'போக்சோ' சட்டத்தின்கீழ்,மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த விஜயசுந்தரத்தைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

villupuram
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe