Advertisment

வீடியோ மிரட்டல்! தாயிடம் சொன்ன சிறுமி! போக்சோவில் கைதான வாலிபர்! 

 Young man arrested in Pocso in karur district

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (50). இவரது மகன் சரத்குமார் (24). இவர் திருச்சியில் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்துத்தங்கி இருந்து திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சரத்குமார் தங்கியிருந்த கீழ் வீட்டில் 14 வயது நிரம்பிய ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் இருந்துள்ளார்.

Advertisment

சரத்குமாருக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.சரத்குமார் ஆசை வார்த்தைகளைக் கூறி பள்ளி மாணவியை தன்னுடைய ஆசைக்கு இணங்க வைத்து அதை செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். இந்த விவகாரம் மாணவிக்கு தெரியவரவே மாணவி, சரத்குமாரிடம் இருந்து விலகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார், அந்த வீடியோவை காண்பித்து மிரட்டி சில முறை மாணவியை மீண்டும் வன்கொடுமை செய்துள்ளார்.

Advertisment

தொடர்ந்து மிரட்டல் விட்டபடி இருந்த வாலிபரால் மாணவி மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் இது குறித்து சிறுமி தன்னுடைய தாயிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த அவரின் தாய், உடனடியாக இதுகுறித்து திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபர் மீது போக்சோவின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு டாக்டர்களிடம் ஆலோசனை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

karur POCSO
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe