Young man arrested for marrying Child girl

சேலம் அருகே, 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Advertisment

சேலம் மாவட்டம் பூலாவரியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், அரசுப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த சதீஸ்குமார் (22) என்பவர் அந்த மாணவியை காதலித்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் உறவினர்கள் என்றும், மாணவியும் சதீஸ்குமாரை காதலித்து வந்ததாகவும் சொல்கின்றனர்.

Advertisment

கடந்த இரு நாள்களுக்கு முன்பு மாணவியும், சதீஸ்குமாரும் திடீரென்று தலைமறைவாகினர். இந்நிலையில் மாணவியின் பெற்றோர் தன் மகளை சதீஸ்குமார் கடத்திச்சென்று விட்டதாக சேலம் நகர மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், காதலர்கள் வீட்டைவிட்டு ஓடிச்சென்று இருவீட்டாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது. மாணவிக்கு பதினெட்டு வயது பூர்த்தி அடையாததால், சிறுமியை திருமணம் செய்தது குற்றம் என்பதால் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக சதீஸ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இதையடுத்து மாணவியை, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.