young man and  police who saved the life of the fainting old lady

Advertisment

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள காவல் நிலையம் அருகாமையில் இளைஞர் லோகு என்பவரும் சங்கராபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் பாரிவள்ளல் என்பவரும் தேநீர் கடைக்குச் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு எதிர் திசையில் பேருந்து நிலையம் நோக்கி மூதாட்டி ஒருவரும் அவரது பின்னால் தனியார் பள்ளி பேருந்து ஒன்றும் வந்துள்ளது.

இந்த நிலையில் மூதாட்டியின் அருகாமையில் தனியார் பள்ளியின் பேருந்தும் வந்து போது திடீரென மூதாட்டிக்கு மயக்கம் ஏற்பட்டு கீழே வாழ்ந்துள்ளார். அப்போது மூதாட்டி பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனை உணர்ந்த லோகு மற்றும் காவலர் பாரிவள்ளல் இருவரும் துரிதமாக செயல்படு மூதாட்டியை பிடித்து இழுத்துக் காப்பாற்றினர்.

இந்த சம்பவம் இப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் பொருந்த பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்தது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் மூதாட்டியை காப்பாற்றிய இளைஞருக்கும், முதல் நிலை காவலருக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.